அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரிலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சிற்றூர்.
Contact Us To Add Your Business
அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரிலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சிற்றூர்.
அந்த ஊருக்குள் ஒருமுறை நமது தொலைக்காட்சி செய்திகளில் சொல்வதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து அந்த கிராமத்திற்குள் அட்டகாசம் செய்தன.
கான் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் யானை கூட்டத்தை அதன் பின்னாலேயே விரட்டிச் சென்றனர்.
தம் வாழிடத்தை இழந்துகொண்டிருக்கும் அவை பிரம்மபுத்திரா ஆற்றில் இறங்கி அதற்குள் இருந்த ஒரு ஆற்றிடைத் தீவில் காட்டுக்குள் புகுந்தன.
அக்காட்டைக் கண்ட கான்துறையினர் திகைத்து நின்றனர்.
ஏனேனில் அதுவரை அங்கு ஒரு காடு இருப்பதாக அவர்களுடைய ஆவணத்தில் எந்தப் பதிவும் இல்லை.
கான்துறையினர் ஆவணத்தில் அந்த தீவு வெறும் மணல் திட்டாகத்தான் பதிவாகி இருந்தது. 1360 ஏக்கர் பரப்புள்ள அந்த மணல் திட்டு எப்படி திடீரென காடாக மாறியது?


