மண்ணை வளமாக்கும் தன்மை அந்த சிற்றுயிருக்கு உண்டு. அதுவும் சிவப்பு எறும்பு.
Contact Us To Add Your Business
சிறு விலங்குகள் மற்றும் உள்ளூர் பறவைகளோடு வலசைப் பறவைகளும் அங்கிருந்தன.
கடமான்கள், காண்டாமிருகங்கள் புலிகள் மற்றும் யானைகள் வசிக்கும் காடாக அது மாறி இருந்தது.
அவர்களை அது வியப்பில் ஆழ்த்தியது.
அது நியாயமான வியப்புதான். ஏனெனில் அது கடந்த 1979 ஆம் ஆண்டு வரைக்கும் மணல் திட்டாகத்தான் இருந்தது. அந்த மணல் திட்டு காடாக மாறியதற்கு ஒரு தனி மனிதரின் உழைப்பே காரணம்.
'ஜாதவ் வாயேக், என்பது அந்த மனிதரின் பெயர்.
அவருடைய செல்லப் பெயரான முலாய் என்ற பெயரில்தான் அக்காடு இன்று 'முலாய் காடு' என்று அழைக்கப்படுகிறது.
அவர் 16 வயது சிறுவனாக இருந்தபோது ஒருமுறை பிரம்மபுத்திராவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வடிந்ததும் அத்தீவுக்கு சென்று பார்க்கிறான் அந்தச் சிறுவன்.
அங்கு ஏராளமான பாம்புகள் இறந்து வெயிலில் உலர்ந்து கிடந்தன.
விலங்குகளின் மீது இயல்பாகவே வாஞ்சைகொண்ட அச்சிறுவன் பாம்புகளுக்காக இரக்கம் கொண்டு அழத்தொடங்கினான்.
இங்கு மரங்கள் இருந்திருந்தால் நிழலில் பாம்புகள் பிழைத்திருக்கக்கூடும் என்பதை அவன் உணர்கிறான். பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு காவல்துறையினரை அணுகி அத்தீவில் மரங்கள் வளர்க்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று வினவுகிறான்? அவர்கள் நகைக்கின்றனர். அங்கு எந்த ஒரு மரமும் முளைக்காது. ஒருவேளை மூங்கில் மட்டும் முளைக்கலாம். அவனுக்கு அந்த பதில் போதுமானதாக இருந்தது.
பிறகு அவன் அங்கு மூங்கிலை வளர்க்கும் முயற்சியைத் தொடங்கினான். மூங்கில் மட்டுமென்றால் அது வெறும் தோப்பாக மட்டுமே இருக்கும். எனவே காடாக இருந்தால்தான் நல்லது என்று வேறு சில மரங்களையும் வளர்க்க முயற்சி செய்கிறான். கான்துறையினர் சொன்னதுபோல அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஒரு நாள் சிறுவனுக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. பிற வகையான மரங்கள் வளர வேண்டுமானால் முதலில் மண்ணின் தன்மை மாறவேண்டும். மண்ணை வளமாக்கும் தன்மை அந்த சிற்றுயிருக்கு உண்டு. அதை இங்கு கொண்டு வந்துவிட்டால் என்ன? என்று அவன் யோசிக்கிறான்.
அந்தச் சிற்றுயிர் வேறு எதுவுமல்ல. எறும்புதான். அதுவும் சிவப்பு எறும்பு. தன் கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவ்வகை எறும்புகளை பிடித்து வந்து மணல் திட்டில் விடுகிறான்.
பலமுறை கடிகள் வாங்கியும் தன் முயற்சியில் அவன் சிறிதும் பின்வாங்கவே இல்லை.
இறுதியில் அவன் முயற்சி வீணாகவில்லை.
இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத் தீவு காடு என்று அழைக்கப்படும் அந்த முலாய் காடு கருதப்படுகிறது. இந்தப் பெருமையை அடைய ஜாதவுக்கு உதவியது எறும்புகளே.
'எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்'
– எழுத்தாளர் ஐயா நக்கீரன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


